நெல்லை மாவட்டம், உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக கடலினுள் பாலம் கட்டப்பட்டு வருகிறது . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மீனவர்கள் சார்பில் கடல் வழி முற்றுகை போராட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து நெல்லை மாவட்ட 8000 நாட்டு படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.