எச்.ராஜா உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு

Forums Inmathi News எச்.ராஜா உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12843
    Kalyanaraman M
    Keymaster

    நீதிமன்றத்தை இழிவாகப் பேசியதாக பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா மீது வழக்குப் பதிந்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை 4வாரங்களுக்குள் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் ஆகியோர், பதிவுத்துறைப் பதிவாளரை அழைத்து, நீதிமன்றத்தை இழிவாகப் பேசியதாக எச்.ராஜா மீது தானாக முன்வந்து அவமதிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டனர். இந்த வழக்குத் தொடர்பாக எச்.ராஜா 4வாரங்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This