தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணா சாலையில், அண்ணா மேம்பாலப் பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதேபோல, சென்னை சிம்சன் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.