விழுப்புரம் செஞ்சி அருகே பலகோடி ரூபாய் மதிப்புமிக்க சமணர் கோவில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செஞ்சியை அடுத்த பெரும்புகையில் மிகவும் பழமை வாய்ந்த சமண மத கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்றிரவு வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்ற பின்னர், சின்னையன் என்பவர் கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறந்து பார்த்தபோது கோவிலில் இருந்த 5 ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது தெரியவந்தது.