உயர்நீதிமன்றத்தையும் காவல்துறையினரையும் அவதூறாகப் பேசிய புகாரில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில், சனிக்கிழமை தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், உயர்நீதிமன்றத்தை மயிர், மண்ணாங்கட்டி போன்ற வார்த்தைகளைப் பிரயோகித்து விமர்சித்தார்.
இந்நிலையில் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் எச். ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.