மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாகக் கூறி போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த எச்.ராஜா போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
காவல்துறையினர் அனைவரும் இந்துக்களுக்கு எதிரானவர்களாகவே இருப்பதாக கடுமையாக சாடினார். நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக அதிகாரி ஒருவர் எடுத்துக் கூறிய போது அவரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்த எச்.ராஜா, ஒவ்வொரு இந்து வீடு வழியாகவும் செல்வோம், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று சவால் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து போலீசாரின் தடையையும் மீறி, எச். ராஜா தலைமையில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் விநாயகர் சிலையுடன் ஊர்வலமாகச் சென்றனர். அந்த ஊரில் உள்ள ஏரியில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.