செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு 17ஆம் தேதி துவக்கம்

Forums Communities Education செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு 17ஆம் தேதி துவக்கம்

This topic contains 0 replies, has 1 voice, and was last updated by  Inmathi Staff 10 months ago.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12697

  Inmathi Staff
  Moderator

  தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பட்டயப் படிப்பு கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கைக்கு கடந்த ஜூலை 23ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. 2 ஆயிரம் மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தகுதிப் பட்டியலின் படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என தேர்வுக் குழு அதிகாரிகள் கூறியிருந்தனர்.

  இந்நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 17ஆம் தேதியன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக்குழு அலுவலகத்தில் நடைபெறும் என மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)

You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This