அண்ணா பிறந்த நாள்: முதல்வர் மற்றும் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

Forums Inmathi News அண்ணா பிறந்த நாள்: முதல்வர் மற்றும் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12694
    Inmathi Staff
    Moderator

    திமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 110ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் இதில் பங்கேற்று பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This