7 பேர் விடுதலை தொடர்பாக, நிர்வாகத் தலைவர் என்ற முறையில், அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் இசைவை தந்தே ஆக வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றார்.