வரதட்சணை புகாருக்கு உள்ளாகும் நபர்களை உடனடியாக கைது செய்ய எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்றம் அமர்வு ‘‘ வரதட்சணை புகார்கள் குறித்து விசாரிக்க மாவட்ட அளவில் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
இது, நாடாளுமன்றத்தில் பணி. சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார் இருந்தால் அதனை சரி செய்து சட்ட திருத்தம் செய்ய வேண்டியது நாடாளுமன்றமே. எனவே, வரதட்சணை புகார் தொடர்பான வழக்கில் முந்தைய உத்தரவே பொருந்தம். இந்த வழக்குகளில் போலீஸாரின் அதிகாரரம் உறுதிபடுத்தப்படுகிறது. அவர்கள் தேவையென்றால் உடனடியாக கைது செய்ய எந்த தடையும் இல்லை. புகார் அளிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் 498(ஏ) பிரிவு தவறாக பயன் படுத்தப்படுகிறது. எனவே இதன் கீழ் கைது செய்யப் படுவர்களுக்கு முன் ஜாமின் வழங்குவது குறித்து அந்தந்த நீதிமன்றங்கள் முடிவு செய்யும்’’ எனக் கூறினர்.