தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், நிலுவையில் இருக்கும் நிலக்கரி இன்னும் மூன்று தினங்களில் முடிந்துவிடுவதால், மின்சாரம் தயாரிப்பிற்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு நேற்று (செப் 14) கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் ஒரு நாளிற்கு சுமார் 72000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. அதாவது 20 வாரி தேவைப்படும், ஆனால் 7 முதல் 8 வாரி நிலகரியே தினமும் உபயோகிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலை நிலவினால் விரைவில் நிலக்கரி மின்னுற்பத்தி மையங்கள் மூடப்படும் நிலை ஏற்படும் என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனால் நிலக்கரி அமைச்சகத்தையும், ரயில்வே அமைச்சகத்தையும் தலையிட்டு மிக விரைவில் 72000 மெட்ரிக் டன் நிலக்கரி தமிழகத்திற்கு வழங்குமாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.