திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார். துரைமுருகன் பொருளாளராக பதவியேற்றதும் அவர் வகித்து வந்த முதன்மைச் செயலாளர் பொறுப்பு காலியாக இருந்தது.
திமுக கட்சி விதிகளின் படி, அப்பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தத் தேவையில்லை. எனவே திமுக சட்ட விதிகள் 17 பிரிவு 3-ன் கீழ் முதன்மைச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை நியமித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனிடம் ஆலோசனை நடத்திய பின் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.