சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில், அடுத்த மாதம் 4 ஆம் தேதி அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்படுவர் என சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி வசந்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் தொலைக்காட்சி எலக்ட்ரீஷியன் ரவி ஆகியோர் மட்டும் நேரில் ஆஜராகினர்.
தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட மற்ற 5 பேரும் வழக்கில் தேவைப்படும் போது நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும், மற்ற நேரங்களில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிப்பதற்கான கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.