வ.உ.சி துறைமுகத்தில் புதிய பனி தெளிப்பான் கருவி அமைப்பு

Forums Communities Fishermen வ.உ.சி துறைமுகத்தில் புதிய பனி தெளிப்பான் கருவி அமைப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12642
    Kalyanaraman M
    Keymaster

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.2.16 கோடி செலவில் பனித்துளி தெளிப்பான் கருவி அமைக்கப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வாகன அமைப்புடன் கூடிய பனித்துளி தெளிப்பான் கருவி ரூ.2 கோடியே 16 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தெளிப்பான், துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கில் லாரிகளில் இருந்து இறக்கும்போதும், ஏற்றும் போதும் ஏற்படும் தூசியை கட்டுப்படுத்தும். சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு பனித்துளியை பீய்ச்சி அடிக்கும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் போது ஏற்படும் தூசியை கட்டுபடுத்துவதற்காக சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு பனித்துளியினை பீச்சியடிக்க கூடிய திறன் கொண்ட இவ்வகை தெளிப்பான் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சிறப்பம்சமாக தூசி ஏற்படுவதற்கு முன்பாகவே பனித்துளியை தெளித்து தூசி ஏற்படாமல் கட்டுப்படுத்த முடியும்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This