திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்குப் பின் சுண்டைக்காய் கட்சிகள் காணாமல் போய் விடும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் சாதனை விளக்க மிதிவண்டிப் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர்கள் தங்கமணியும், கே.டி.ராஜேந்திரபாலாஜியும் மிதிவண்டி ஓட்டி பேரணியை தொடங்கி வைத்தனர்.