தமிழகம் முழுவதும் 22 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

Forums Inmathi News தமிழகம் முழுவதும் 22 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12591
  Kalyanaraman M
  Keymaster

  தமிழகம் முழுதும்  22 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.

  பெண்களுக்கான குற்றத்தடுப்பு மதுரை டிஎஸ்பி மகேந்திரன் மதுராந்தகம் சப் டிவிசன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். தர்மபுரி குற்ற ஆவணகாப்பக டிஎஸ்பி சுப்பையா சத்தியமங்கலம் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி கங்காதரன் திருவள்ளூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி விஸ்வநாத் ஜெயின் தரமணி உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். தரமணி உதவி ஆணையர் சுப்பராயன் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக சென்னையில் மாற்றப்பட்டுள்ளார். பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக சென்னை பன்னீர்செல்வம் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு குழு உதவி கமிஷனர் கோவிந்தராஜு பரங்கிமலை உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

  பரங்கிமலை உதவி ஆணையர் மோஹன்தாஸ் மதுரை நகர குற்றப்பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி கண்ணன் ராயபுரம் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ராயபுரம் உதவி ஆணையர் தனவேல் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சச்சிதானந்தம் ஆம்பூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்

  மேற்கண்ட 10 பேர் உட்பட மாவட்டம் முழுதும் 22 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This