சென்னை சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டவும், முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னனா விருது வழங்கவும் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த வாரம் தமிழக அமைச்சரவை அவசரமாக கூடியபோது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதேநேரம், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வைக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி