தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் பி.எட் விண்ணப்பம் வினியோகம்

Forums Communities Education தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் பி.எட் விண்ணப்பம் வினியோகம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12502
  Kalyanaraman M
  Keymaster

  தொலைதூர பி.எட்.படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. 1000 இடங்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. டி.பி.எட். முடித்து தற்போது ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் இப்படிப்பிற்கு தகுதி உடையவர்களாவர். சென்னை, கோவை, தருமபுரி, மதுரை, திருச்சி, நீலகிரி, விழுப்புரம் நெல்லை உள்ளிட்ட இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.

  இரண்டாண்டு படிப்பில் 15 நாட்கள் வீதம் நான்கு முறை வகுப்புகள் நடைபெறவுள்ளன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாளாகும். ஜனவரி முதல் வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து 50,000 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This