ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடல் மீன் உணவு நடமாடும் விற்பனை மையம்

Forums Communities Fishermen ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடல் மீன் உணவு நடமாடும் விற்பனை மையம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12491
  Kalyanaraman M
  Keymaster

  ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் (மதுரை அலகு) சார்பில் கடல் மீன் உணவு நடமாடும் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை கலெக்டர் வீரராகவ ராவ் திறந்து வைத்தார்.

  இந்த விற்பனை நிலையமானது அலுவலக பணி நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை கலெக்டர் அலுவலக வளாகத்திலும், வார இறுதி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தரும் இடமான தனுஷ்கோடியில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதில் இறால் பிரியாணி, இறால் ப்ரை, மீன் ப்ரை, மீன் குழம்பு சாப்பாடு ஆகியவை தலா ரூ.70க்கும், மீன் கட்லெட், நண்டு சூப் ஆகியவை தலா ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This