மாடித் தோட்டம்: செய்யக் கூடியவையும் கூடாதவையும்

Forums Communities Farmers மாடித் தோட்டம்: செய்யக் கூடியவையும் கூடாதவையும்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12483
  Inmathi Staff
  Moderator

   

  மாடித் தோட்டம்: செய்யக்கூடியவை

  தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடைக்காலம் முடிந்து  ஜூன் , ஜூலை மாதங்களுக்கு மேல் வீட்டுத் தோட்டம் அமைப்பது நல்லது.
  மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்க குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி நன்கு படும் இடமாக தேர்வு செய்ய வேண்டும்.
  தோட்டத்திற்கு தேர்வு செய்த இடத்தில் தளத்தை ஈரம் தாக்காமல் இருக்க பாலித்தின் விரிப்பினை தளத்தில் பரப்ப வேண்டும்.
  காய்கறித்தோட்டம் போட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் பெரியதாக இடத்தைத் தேடி அலைய வேண்டாம். மனசு வைத்தால் போதும். மொட்டை மாடியில் காய்கறி, மாடிப்படிகளில் கீரை, சன்னல் ஓரங்களில் ரோஜா என்று எல்லாவித செடிகளையும் நடலாம்.
  தேங்காய்த் துருவினதும் தூக்கி எறியும் கொட்டாங்குச்சியில் கூட கீரை வளர்க்கலாம். தொட்டி, பாலிதின் பை, நேரடியாக  நிலத்தில்… என எதில் செடி வளர்க்க வேண்டும் என்றாலும், அடிப்படையான சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  நீங்கள் செடி வளர்க்க நினைக்கும் பையில், அல்லது நிலத்தில் ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த மண் கலவை தயரானதும் உடனே விதைக்க வேண்டாம். 7-10 நாட்கள் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு விதைப்பு செய்யதால், நல்ல விளைச்சல் நிச்சயம்.
  ரெடிமேடாக விற்கும் தேங்காய் நார்கட்டியை கூட வீட்டுத்தோட்டதிற்கு பயன்படுத்தலாம். தேங்காய்நார் கழிவுக் கட்டியை, பாலித்தின் பையினை      திறந்து, உள்ளே வைக்க வேண்டும். அதில் 10 லிட்டர் அளவு நீரை ஊற்ற வேண்டும்.
  நன்கு ஊறிய தேங்காய் நாருடன் 2 கிலோ தொழுஉரம், உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சண கொல்லிகளை தலா 10 கிராம் என்ற அளவில் கலந்து    நன்கு கிளறிவிட வேண்டும்.
  பை, தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும்.
  கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி பயிர்களை நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும்.

  வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும்.
  பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பையில் ஊற்ற வேண்டும்.
  பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர்  நீரில் கரைத்து மாலை வேளையில்        செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.
  கோடை காலத்தில் இருமுறையும், குளிர் காலத்தில் ஒரு முறையும் ஒரு பைக்கு ஒரு லிட்டர் நீர் ஊற்ற வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் மட்டுமே பாசனம் செய்ய வேண்டும்.

  மாடித்தோட்டம் செய்யக்கூடாதவை

  கோடைக்காலத்தில் புதியதாக தோட்டம் அமைப்பதை தவிர்க்க வேண்டும்
  காய்கறி தோட்டம் அமைக்க நிழல் விழும் பகுதியை தேர்வு செய்யக் கூடாது.
  பைகளை நேரடியாக தளத்தில் வைக்கக் கூடாது.
  பைகளை தயார் செய்த உடன் விதைப்பு அல்லது நடவினை மேற்கொள்ளக் கூடாது.
  பைகளை நெருக்கி வைக்கக் கூடாது.

  • This topic was modified 2 years, 10 months ago by Inmathi Staff.
Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This