சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு கோரியுள்ளதாக தமிழக அரசு தகவல்

Forums Inmathi News சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு கோரியுள்ளதாக தமிழக அரசு தகவல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12473
  Kalyanaraman M
  Keymaster

  சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசு தமிழக அரசிடம் கோரியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தகவல் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

  சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

  அப்போது, வழக்கை சி.பி.ஐ,க்கு மாற்றியது தொடர்பான ஆவணங்கள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. இயக்குநர் அலுவலகம் அளிக்கும் பதிலைப் பொறுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என சி.பி.ஐ. வழக்கறிஞர் கூறினார்.

  தொடர்ந்து, தமிழக அரசு வழக்கறிஞர்  சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசு கோரியுள்ளதாக தமிழக அரசு பதில் கூறியுள்ளது.

  இதனையடுத்து, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பான நிலைப்பாட்டை தெரிவிக்க சிபிஐ-க்கு அவகாசம்  நீதிமன்றம் அவகாசம் அளித்தது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This