மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். மேகதாதுவில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு தெளிவாக இருப்பதாக அவர் கூறினார். தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியபோது, கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தும், குடிநீருக்குக் கூட தண்ணீர் திறக்கவில்லை என்றும், மேகதாதுவில் அணைக் கட்டினால், தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.