தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கடைசிகட்ட கவுன்சிலிங் இன்று துவக்கம்

Forums Communities Education தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கடைசிகட்ட கவுன்சிலிங் இன்று துவக்கம்

This topic contains 0 replies, has 1 voice, and was last updated by  Kalyanaraman M 11 months, 1 week ago.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12427

  Kalyanaraman M
  Keymaster

  தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள BDS படிப்புக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வில், அரசு ஒதுக்கீட்டில் 264 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 569 இடங்களும் நிரப்பப்படாமல் இருந்தன. இந்த நிலையில் இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.

  இந்த இடங்களில் சேர இதுவரை விண்ணப்பிக்காதோரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி 207 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டிற்கு காலை 10 மணிக்கு கவுனிசிலிங் தொடங்கியது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கு பிற்பகல் 2 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

Viewing 1 post (of 1 total)

You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This