இந்தியாவிலேயே புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் தான் அதிக தற்கொலைகள் நடைபெறுவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஆணையர் இதனை தெரிவித்துள்ளார்.