ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக ஆளுனருக்கு அமைச்சரவை பரிந்துரை

Forums Inmathi News ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக ஆளுனருக்கு அமைச்சரவை பரிந்துரை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12416
    Kalyanaraman M
    Keymaster

    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாலை 4 மணிக்கு தொடங்கி 6 மணி வரை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும்  பங்கேற்றுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய சட்டப்பிரிவு 161ன் கீழ் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This