ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது.
இதனால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து வைக்கப்பட்ட எச்சரிக்கைப் பலகை, கடல்நீரில் மிதப்பது போன்று உள்ளது. தனுஷ்கோடியின் தென் பகுதியில், வழக்கமாக, ஆடி மாதம் முடிந்து ஆவணி மாத தொடக்கம் முதல், ஐப்பசி மாதம் வரை கடல்நீர்மட்டம் உயர்ந்து காணப்படும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வழக்கத்தைவிட கடல் சீற்றமாக இருக்கும்.
தற்போது, ஆவணி மாத இறுதி வாரத்தில், தனுஷ்கோடி தெற்கு பகுதியில், கடல்நீர் மட்டம் வழக்கமான அளவை விட சற்று உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகை மிதப்பது போல் காட்சியளிக்கிறது.