திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த 18 தமிழர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்..
போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்ப முயன்றது, கள்ளத்தோணி மூலம் தப்பித்து செல்வது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி திருச்சி மத்திய சிறையில் இலங்கை தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
தங்களை விடுதலை செய்யக் கோரி பிரபாகரன், யுகப்பிரியன், உள்ளிட்ட 18 பேர், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.