தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் இணைந்து மீனவ பெண்களுக்கான கடல்பாசி வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி ஏர்வாடி கல்பார் புயல் பாதுகப்பு கட்டிடத்தில் நடத்தியது. கடலில் மீனவளங்கள் குறைந்து வருவதால் மீனவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதற்கு மாற்று ஏற்பாடாக கூண்டு முறையில் கடற்பாசி வளர்ப்பு குறித்த மேம்பாட்டு பயிற்சி ராமநாதபுரம் மண்டல மீன்துறை துணை இயக்குநர் காத்தவராயன் தலைமையில் நடைபெற்றது.