திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கூட்டணி உருவாகிக் கொண்டிருப்பதாக மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலினுக்கு மறைமுகமாக பாஜக உதவி செய்து வருவதாகவும், ஏற்கனவே அமைக்கப்பட்ட கூட்டணியை புதுப்பிக்கும் வேலை நடைபெறுவதாகவும் கூறினார்.