ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான சிசிடிவி காட்சிகளை 7 நாட்களில் ஒப்படைக்க அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனை தலைமை நிர்வாகி சுப்பையா விஸ்வநாதன் இன்று ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜரானார். அப்போது செப்டம்பர் 22-ம் தேதி பேஸ்மேக்கர் பொருத்தப்படும் நிலையில் காய்ச்சல் என செய்தி ஏன்? என்றும், சிசிடிவியை நிறுத்த சொன்னது யார் என்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அப்போலோ மருத்துவமனை தலைமை நிர்வாகி சுப்பையா விஸ்வநாதனுக்கு சராமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட போது நீர்ச்சத்து குறைவு எனவும் செய்தி வெளியிட்டது ஏன் என்றும் ஆணையம் கேள்வி எழுப்பியது. சிசிடிவி காட்சி பதிவுகளை நிறுத்த சொன்னது யார் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.