தனது உறவினர்களுக்கு நெடுஞ்சாலை துறையில் டெண்டர் ஒதுக்கீடு செய்தத்தில் ரூ.4800 கோடி ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை செப்டம்பர் 12ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.