உப்புத் தன்மையால் பழவேற்காடு ஏரியில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து

Forums Communities Fishermen உப்புத் தன்மையால் பழவேற்காடு ஏரியில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12351
  Inmathi Staff
  Moderator

  சென்னை   அருகே   உள்ள   மிகப்பெரிய   உவர்ப்பு  நீர்  காயல்  எனப்படும்.   பழவேற்காடு   ஏரி  நீரின்   உப்புத்தன்மை    கூடுதலாவதால்    அந்த   ஏரியில்   வாழும்   உயிரினங்களுக்கு   ஆபத்தான  சூழல்  ஏற்பட்டுள்ளது

  சென்னைக்கு  வடக்கே  ஆந்திர மாநில  எல்லையில்  அமைந்துள்ள பழவேற்காடு  ஏரி  இந்தியாவிலேயே  2வது  மிகப்பெரிய  உவர்ப்பு  நீர்  ஏரியாகும்.   கடற்கரையை  ஒட்டி  அமைந்துள்ள   இந்த   ஏரி   கடல்  நீர்   ஏற்றம்  இறக்கம்   கொண்ட   நீர்   நிலையாகும்.

  அந்த  ஏரியின்  நீர்த்தன்மை  அதற்கு   கடலில் இருந்து புகும்  தண்ணீரால்   ஏற்படும்  தாக்கங்கள்   இவைகளைப்பற்றி   எந்த   வித  விஞ்ஞான   ரீதியான   ஆய்வும்   முறையான  நடைமுறையும்   அரசு  மேற்கொள்ளாததால்  அவ்வப்போது   கடல்  முகத்துவாரம்   திறந்து  விடப்படாததால்  பல   நேரங்களில்    ஏரியில்   வாழும்  உயிரினங்களின்   வாழ்வு    கேள்விக்குறியாகி   வருவதாக    கருதப்படுகிறது.

  வழக்கமாக  கோடை  காலங்களில்  ஏரி  தண்ணீரின்  உப்புத்தன்மை  கூடுதலாவதால்  அங்கு  உற்பத்தியாகும்  மீனின்  அளவு  குறைவாகவே  காணப்படும்.

  முத்துவாராம்    மூடப்பட்டிருக்கும்    காலங்களில்   கடல்   நீர்   வரத்து    இன்றியும்    அருகாமையில்    இயங்கும்   தொழிற்சாலைகளின்   சுத்திகரிக்க   படாத    கழிவு   நீர்   ஏரியில்    கலக்கவிடப்படுவதாலும்    நீர்   மாசுபட்டு    ஏரி   வாழ்   உயிரினங்கள்   பெருமளவில்   பாதிக்கப்படுவது   வாடிக்கையாக  உள்ளது.

  சென்னைக்கு   வடக்கே   வங்க   கடற்கரைக்கு   அருகாமையில்    தமிழ்  நாடு   –  ஆந்திரா  மாநில  எல்லைப்பகுதியில்   கடற்கரைக்கு  இணையாக    18,440  ஹெக்டேர்   நிலபரப்பில்   அமைந்துள்ள  இந்த  ஏரி   ஆந்திர  மாநில   நிலப்பரப்பில்   720   சதுர   கிலோ மீட்டர்   அளவில்,     ஏரியின்   84   சதவீதமும்   தமிழகத்தில்  16   சதவீத   நிலப்பரப்பிலும்   இயற்கையாக   அமைந்துள்ள   ஏரியாகும்.

  இந்த  நீர்ப்பரப்பானது  60  கிலோமீட்டர்   நீளமும்   அகலத்தில் 0.2 கிலோமீட்டர்   முதல்   17.5  கிலோமீட்டர்   என்ற   பரப்பளவு   கொண்டதாகும்.

  இந்த  ஏரியின்  கடல்   முகத்துவாரத்தை    சீரமைக்க   தமிழக   அரசு

  ரூ.48   கோடி   நிதியை   கடந்த    ஜனவரி   மாதம்   ஒதுக்கியும்   இதுவரை   உரிய  வேலைகள்  நடைபெறவில்லை   என்று  அப்பகுதி  மக்கள்  தெரிவிக்கின்றன.

  பொதுவாக   கடல்   நீர்   ஏரியின்   உள்ளே    வருவது   அங்குள்ள  பல்லுயிர்   சுற்றுசூழல்   பாதுகாப்புக்கு     அரணாக    அமைவதாக   கருதப்படுகிறது.   அதே   சமயத்தில்  முத்துவாரம்   திறந்து  விடப்படாவிட்டால்    வாழ்வாதாரத்திற்கு   அந்த   ஏரியை   நம்பியுள்ள   ஆயிரக்கணக்கான   மீனவர்களின்    வாழ்வாதாரம்    அற்று   விடுமோ   என்று  அச்சம்   கொள்கின்றனர்.

  அதே  போன்று   உலகின்  பல  பாகங்களின்  இருந்து  இனப்பெருக்கத்திற்காக   வருகை   தரும்   பல   வகை   பறவைகளின்   வருகை   அற்றுப்போய்    பல்லுயிர்    பேணும்   தன்மைக்கு  பாதகம்  ஏற்படும்   சுழலும்   நிலவி   வருகிறது.

  இந்த  ஏரிப்பகுதியில்  அமைந்துள்ள  20  தீவுகளில்   இந்திய  அரசின்  ராக்கெட்   தளம்   அமைந்துள்ள   ஸ்ரீஹரிகோட்டா  தான்   மிகப்பெரிய  தீவாகும்

  ஏரிக்கு   மழை காலங்களில்  வரும்  தண்ணீர்  இந்த  ஏரியை  முகத்துவார   குஞ்சு   பொரிப்பகமாகவும்   இனவிருந்தி  தளமாகவும்   மாற்றுகிறது.

  கோடை   காலத்தில்   நீர்   ஆவியாகி   வரண்ட   பூமியாக  மாறி  விடுகிறது

  இந்த   ஏரி  நீரின்   வெப்ப  நிலை   25  டிகிரி    செல்சியஸ்  முதல் 32.6 டிகிரி  செல்ஸியஸ் வரை  உள்ளது.

  ஏரியின்   உப்புத்தன்மை   கூடுதலாகவும்,   குறைவாகவும்   மாறாத அளவு   பாதுகாப்பதில்   அரசு   உரிய   கவனம்   செலுத்தினால்   மீனவர்களின்  வாழ்வாதாரத்தை  பாதுகாக்க  இயலும்,  பல  உயிரினங்களின்  வாழ்வியலையும்   பாதுகாக்க   முடியும்   என்று      தேசிய   மீனவர்  பேரவை  தலைவரும்,  புதுச்சேரி   முன்னாள்    எம்.எல்.வு  மான    மா.  இளங்கோ.  இது குறித்து கருத்து  தெரிவித்துள்ளார்.

   

   

   

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This