பாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் எஸ்பி சென்னை ஹைகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அந்த மனுவில், புகாருக்கு உள்ளான ஐஜி முருகனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பாலியல் புகாரை விசாரிக்கும் விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் சென்னை ஹைகோர்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.