கடல் நீரோட்ட மாற்றத்தால் போதிய மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் கடலூர் மீனவர்கள்

Forums Communities Fishermen கடல் நீரோட்ட மாற்றத்தால் போதிய மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் கடலூர் மீனவர்கள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12309
  Inmathi Staff
  Moderator

  கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, தாழங்குடா உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

  அதேபோல் கடந்த 2 நாட்களாக கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு போதிய அளவில் மீன்கள் கிடைக்கவில்லை. கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மீன்கள் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் தங்கள் படகுகளை துறைமுக பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This