புதுச்சேரி அருகே மீனவர் கிராமத்தில் சுனாமியில் உயிர் காக்கும் பயிற்சி

Forums Communities Fishermen புதுச்சேரி அருகே மீனவர் கிராமத்தில் சுனாமியில் உயிர் காக்கும் பயிற்சி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12305
  Inmathi Staff
  Moderator

  புதுச்சேரி  அருகே   நல்லவாடு   மீனவர்   கிராமத்தில்  சுனாமி  காலங்களில்   நிகழ  கூடிய   மக்களை   வெளியேற்றி   பாதுகாப்பான   இடங்களுக்கு   கொண்டு   செல்லும்   மாதிரி   உயிர்   காக்கும்   3  மணி  நேர  பயிற்சி  மேற்கொள்ளப்பட்டது.

  தேசிய    பேரிடர்    மேலாண்மை   ஆணையமுகம்   புதுச்சேரி   மாநில  வருவாய்   மற்றும்   பேரிடர்   மேலாண்மை   துறையும்   இணைந்து   மீனவர்  கிராமத்தில்   மீனவ   மக்களை   விழிப்புணர்வு   செய்ய   மேற்கண்ட   பேரிடர்  பயிற்சியை   மேற்கொண்டனர்.

  சுமத்ரா  தீவுக்கு  அருகே  இந்தோனேஷியாவில்   காலை   8:30 மணிக்கு  நில  அதிர்வு   ஏற்பட்டதாகவும்  அதனால்   சுனாமி   எச்சரிக்கை  விடுக்கப்பட்டதாகவும்   நல்லவாடு   மீனவ   கிராமத்தில்   ஒலி   பெருக்கி  மூலம்   அறிவிப்பு  வெளியிடப்பட்டது.

  ஹைதராபாத்  நகரில்   இயங்கும்   இந்திய   தேசிய   பெருங்கடல்  தகவல்  மையம்   மூலம்  இந்த  அறிவிப்பு   வெளியிடப்பட்டது.

  அதை  தொடர்ந்து   தேசிய   பேரிடர்  மேலாண்மை   ஆணையம்  மூலம்  அரக்கோணத்தில்   இருந்து   வந்த  பேரிடர்   போக்கும்   அதிரடி படையினர்   கிராமத்தில்   வந்து  இறங்கினார்கள்.

  அவர்களுடன்  புதுச்சேரி   மாநில   பேரிடர்    மேலாண்மை   துறை, மீன்வளத்துறை,   வருவாய்  துறை,   காவல்  துறை,   பொதுப்பணித்துறை   ஆகிய  அரசு   துறை   அதிகாரிகள்   ஊழியர்கள்,    மாவட்ட   கலெக்டர்  அபிஜித்   விஜய்   சவுத்ரி  தலைமையில்   அக்கிராமத்திற்கு   வருகை   தந்து  பேரிடர்   போக்கும்   பணியில்   ஈடுபட்டனர்  .

  கடலில்  இருந்து   100  மீட்டர்   தூரத்தில்   வீடுகளில்  அடைபட்டுக்கிடந்த   200  மீனவர்கள்   அங்கிருந்து  பாதுகாப்பான  இடங்களுக்கு  அப்புறப்படுத்தப்பட்டனர்.

  அருகாமையில்   உள்ள   அரசு   கலைக்   கல்லூரி   வளாகத்தில்   அவர்கள்   தங்கவைக்கப்பட்டனர்.

  சுமார்   பகல்   10  மணிக்கு   தொடங்கி   1  மணி   வரை   3 மணி நேரம்   நடைபெற்ற   இந்த   மாதிரி   பயிற்சி   அப்பகுதி   மக்கள்   பேரிடர்  பற்றியும்   அப்பொழுது   நிகழவேண்டிய   பணிகள்  குறித்தும்   அறிந்து  கொள்ள   உதவியாக  இருந்ததாக   அப்பகுதி   மீனவ  மக்கள்  தெரிவித்தனர்.

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This