முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை தொடர்ந்து 139 அடியாக பராமரிக்க உத்தரவிடக் கோரிய கேரள அரசு மற்றும் ரசூல் ராய் தரப்பு வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.