குட்கா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்யுங்கள் என சக அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா ஊழலில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை.இந்த வழக்கை சந்திக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் தரப்பில் ராஜினாமா செய்ய சொல்லியும் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய மறுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குட்கா ஊழலில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ அதிகாரிகளால் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேற்று மாலை முதல்வரை சந்தித்துள்ளார்.
வெகுவிரைவில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட உள்ளதாக உறுதியான தகவல் மாலை வொளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.