பாம்பன் கடலில் புதிய பாலம் கட்டுவதற்காக கடந்த ஜூலை மாதம் முதல் மண்டபம் கடற்கரை பூங்கா, பாம்பன்தெற்குவாடி போன்ற கடற்கரை பகுதிகளில் பல இடங்களில் மண்ஆய்வு நடைபெற்றது. மண்டபம் கடற்கரை பூங்கா அருகே உள்ள 2 இடங்களில் கடலுக்குள் மிதவை அமைத்து ஆழ்துளை மூலம் 40 அடி வரை துளையிட்டு மண் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து மீண்டும் இந்த பணி நேற்று முதல் தொடங்கியது. அதில் கடலுக்குள் இரும்பினால் ஆன பெரிய மிதவைகள் அமைத்து அதில் ஆழ்துளை எந்திரம் அமைத்து, அதன் மூலம் கடலின் அடியில் துளையிட்டு மண்ணை பரிசோதனைக்காக ஆய்வு நடைபெற்று வருகிறது. கடலின் மேல் பகுதியில் இருந்து எவ்வளவு தூரம் வரையிலும் மண் உள்ளது. மண்ணுக்கு பிறகு எத்தனை அடியில் பூமிக்கடியில் பாறை உள்ளது, மண்ணில் உப்புத் தன்மை எந்த அளவு உள்ளது என்ற ஆய்வு நடத்தப்படுகிறது.