நாகையில் தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கியதாக புகார்

Forums Communities Fishermen நாகையில் தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கியதாக புகார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12235
    Inmathi Staff
    Moderator

    நாகை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை மீனவர்கள் தாக்கி 8 லட்சம் ரூபாய் மதிப்புடைய வலைகளை பறித்து கொண்டு விரட்டியடித்தாக புகார் எழுந்துள்ளது.

    வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்து நேற்று 50க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில், 200 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்குவந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களை வழிமறித்து தாக்கியதோடு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை பறித்து கொண்டு விரட்டியடித்தனர். இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள், வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் அளித்துள்னர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This