கொச்சியில் கப்பல் மோதி பலியான மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு

Forums Communities Fishermen கொச்சியில் கப்பல் மோதி பலியான மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12233
  Inmathi Staff
  Moderator

  கேரள கடல்பகுதியில், கப்பல் மோதி உயிரிழந்த நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் இனயம்புத்தன்துறை, தேங்காப்பட்டணம், அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி கேரள மாநிலம் முனம்பம் என்ற இடத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். அப்போது கப்பல் ஒன்று மோதி படகு கவிழ்ந்ததில், நான்கு மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும், முதலமைச்சர் கூறியுள்ளார்.

  இந்த சம்பவம் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டு இறுதி அறிக்கை சமர்பிக்க வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் காணாமல் போன மீனவர்கள் இறந்தவர்களாக கருதி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This