கல்வி பயிலாதாவர்களே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாக முதல்வர்

Forums Inmathi News கல்வி பயிலாதாவர்களே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாக முதல்வர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12229
    Inmathi Staff
    Moderator

    சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு அரசின் சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது, தூய்மை பள்ளி விருது ஆகியனவற்றை வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்று விருதுகள் வழங்கி கவுரவித்தனர். 363 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளும், 960 மாணவர்களுக்கு காமராஜர் விருதுகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பள்ளிகளுக்கு தூய்மை பள்ளி விருதுகளும் வழங்கப்பட்டன. விழாவில், உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, கல்வி பயிலாதாவர்களே இல்லாத மாநிலமாக, தமிழ்நாட்டினை, ஆளும் அதிமுக அரசு மாற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.

    விழாவில் உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 2017-18ம் ஆண்டு 3 ஆயிரத்து 73 பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This