தனக்கு ஆதரவாக ஒன்றரை லட்சம் பேர் பேரணியில் கலந்து கொண்டிருப்பதாக அழகிரி பேச்சு

Forums Inmathi News தனக்கு ஆதரவாக ஒன்றரை லட்சம் பேர் பேரணியில் கலந்து கொண்டிருப்பதாக அழகிரி பேச்சு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12194
    Inmathi Staff
    Moderator

    மு.க.அழகிரி ஏற்கெனவே அறிவித்தபடி புதன்கிழமை அவரது தலைமையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற்றது. முன்னதாக, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்து பேரணிக்காக அழகிரி ஆதரவாளர்கள் வாகனங்களில் வந்திருந்தனர். பாதுகாப்புக்காக பேரணி நடைபெறும் பகுதி முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஆதரவாளர்கள் அழகிரி, அவரது மகன் துரை தயாநிதியின் உருவம் பொறித்த கருப்பு நிற உடைகளை அணிந்திருந்தனர்.

    பேரணியின் போது செய்தியாளர்களிடம் பேசிய முக அழகிரி இந்த பேரணிக்கு எவ்வித உள் நோக்கமும் இல்லை எனவும் கலைஞரின் 30 வது நினைவு நாளையொட்டி பேரணி நடத்தியதாகவும் கூறினார். மேலும் தனக்கு ஆதரவாக பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் திரண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This