அழகிரியின் பேரணியைத் தொடர்ந்து, இன்று காலை கலைவாணர் அரங்கில் ஆசிரியர் தினத்தையொட்டிய விழா மாலை 5 மணிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சட்டம் ஒழுங்கு பிரச்சினை பாதிப்பு ஏற்படாமல் இருக்க பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதாக கூறினார். மேலும், அழகிரி ஸ்டாலின் பிரச்சினை அண்ணன் தம்பி பிரச்சினை எனவும் அதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை எனக் கூறினார்.