பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை அனுமதிக்ககூடாது என மீனவர்கள் வேலை நிறத்தம்

Forums Communities Fishermen பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை அனுமதிக்ககூடாது என மீனவர்கள் வேலை நிறத்தம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12163
    Inmathi Staff
    Moderator

    பதிவு செய்யாத விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நாட்டுப்படகு மீன்வர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதால், பாரம்பரிய மீனவர்களின் பலகோடி மதிப்பிலான வலைகள் சேதம் அடைந்து வருகின்றன. சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    ஆகையால் பதிவு செய்யாமல் மீன்பிடித்து வரும் படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்கக்கூடாது. சட்டப்படி அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதே போன்று பெரும்பாலான மீனவ கிராமங்களில், கடற்கரையோரங்களில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.

    தூத்துக்குடி இனிகோநகர் பகுதியில் மீனவர் ஜோசப் தலைமையில் மீனவர்கள் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே போன்று மாவட்டத்தில் பல இடங்களில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This