இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடிச் சட்டத்தின்மூலம் தமிழக மீனவர்களின் 192 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் அரசுடமையாக்கப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, இலங்கை அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என 11 மீனவ சங்கத்தின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 850க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.