சிறந்த தூய்மையான பள்ளி : தேசிய அளவில் புதுவை பள்ளி முதலிடம்

Forums Communities Education சிறந்த தூய்மையான பள்ளி : தேசிய அளவில் புதுவை பள்ளி முதலிடம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12154
  Inmathi Staff
  Moderator

  தேசிய அளவில் சிறந்த தூய்மைப் பள்ளிக்கான பட்டியலில் புதுச்சேரி – கூனிச்சம்பட்டு அரசுப் பள்ளி முதலிடத்தை பிடித்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

  சட்டப்பேரவை வளாகத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வில்லியனூர் அரசுப் பள்ளியில் நாளை நடைபெறும் விழாவில், 20 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளதாக நாராயணசாமி கூறினார். மேலும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் 164 பேர் கௌரவிக்கப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This