சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் மறுகூட்டல் முறைகேடு வழக்கில் உதவிப் பேராசிரியர்களிடம் நடந்த விசாரணை முடிந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகளில் பணம் வாங்கிக் கொண்டு அதிகமான மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா, உதவிப் பேராசிரியர்கள் விஜயகுமார், சிவக்குமார் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முறைகேடு தொடர்பாக உதவிப் பேராசிரியர்களிடம் 3 நாட்களாக நடந்த விசாரணை முடிவுக்கு வந்தது.