செப்.15க்குள் பிறமொழி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என ஹைகோர்ட்டில் அரசு உறுதி

Forums Communities Education செப்.15க்குள் பிறமொழி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என ஹைகோர்ட்டில் அரசு உறுதி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12152
    Inmathi Staff
    Moderator

    பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து பிறமொழி பாடபுத்தகங்கள் வழங்கப்படும் என ஹைகோர்ட் மதுரைக்கிளையில் அரசு தரப்பு உறுதியளித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் தவிர மலையாளம், சமஸ்கிருதம்,ஜெர்மன் உள்ளிட்ட பிற மொழி பாடங்களும் கற்பிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் பள்ளி தொடங்கிய நிலையில் இதுவரை பிற மொழி பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு பிறமொழி பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை என செய்தி வெளியானது.

    இதன் அடிப்படையில் ஹைகோர்ட் மதுரைக்கிளை, தாமாக முன்வந்து வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This