மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Forums Inmathi News மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12150
    Inmathi Staff
    Moderator

    காவிரியின் குறுக்கே மேகதாதில் கர்நாடகம் அணைகட்ட எதிர்ப்புத் தெரிவித்துப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    பிரதமருக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், மேகதாதில் அணை கட்டி குடிநீருக்கும்,  மின்னுற்பத்திக்கும் பயன்படுத்துவது பற்றிய சாத்தியக் கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்துக்குக் கர்நாடக அரசு அனுப்பியிருப்பது ஒருசார்பான நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இது காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்பை மீறும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேகதாதில் அணை கட்டினால் ஆற்றின் இயற்கை நீரோட்டத்தைப் பாதித்து, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் செயல்படுத்த முடியாமல் போகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This