விநாயகர் சிலைகள் அமைக்க ஒற்றைச் சாளர முறைப்படி அனுமதி : என தமிழக அரசு உறுதி

Forums Inmathi News விநாயகர் சிலைகள் அமைக்க ஒற்றைச் சாளர முறைப்படி அனுமதி : என தமிழக அரசு உறுதி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12148
    Inmathi Staff
    Moderator

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் அமைக்க ஒற்றைச் சாளர முறைப்படி அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    விநாயகர் சிலைகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத்துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அனுமதியை பெறுதல் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிரான மனுவில் குறுகிய காலத்தில் அனைத்து அனுமதியையும் பெறுவது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது ஒற்றை சாளர முறையில் மாநகரங்களில் காவல் துணை ஆணையரிடமும் மாவட்டங்களில் துணை கண்காணிப்பாளரிடமும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This